பதிவு செய்த நாள்
06
ஜூன்
2019
01:06
உடுமலை: போடிபட்டி பாலதண்டாயுதபாணி கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா வரும் 9 ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, கோவிலில், காலை, 7:30 மணி முதல், 9:00 மணி வரை, மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபிதம், வேள்வி வழிபாடு, நிறைவேள்ளி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
காலை, 10:00 மணிக்கு, மகாபிஷேகம், கலச அபிஷேகம், அலங்காரமும், காலை, 10:30 மணிக்கு, மகாதீபாராதனை, விபூதி பிரசாதம் வழங்குதல், காலை, 10:30 மணி முதல், கரூர்
திருமுறை பாடசாலை முதல்வர் சுவாமிநாத ஓதுவார் தலைமையிலான குழுவினரின், திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை திருமூர்த்தி
மில்ஸ் நிர்வாகத்தினரும், உடுமலை உழவாரம் திருப்பணி மன்றத்தினரும் செய்து வருகின்றனர்.