அன்னூர்:சிவனடியார்கள் கூட்டம் சார்பில், அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.அன்னூர், கருவலூர், அவிநாசி, புளியம்பட்டி பகுதி சிவனடி யார்கள் திருவாசகம் வாசித்தனர். பின், மன்னீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.