மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில், ஆயிரக் கணக்கான இஸ்லாமியர் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம், ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. நகரில் உள்ள, 18 பள்ளிவாசல்களில் இருந்து இஸ்லாமியர் ஊர்வலமாக வந்தனர். காலை, 9:00 மணிக்கு மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் இமாம் கலிபுல்லா, சிறப்பு தொழுகை நடத்தினார். வேலூர் அரபி கல்லூரி பேராசிரியர் அப்துல் ஹமீது சிறப்புரை ஆற்றினார்.