பதிவு செய்த நாள்
07
ஜூன்
2019
01:06
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பிரிவில், சாத்தூர் பெருமாள்சுவாமி கோவிலில், 13ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது.கிணத்துக்கடவு, அரசம் பாளையம் பிரிவில் சாத்தூர் பெருமாள்சுவாமி கோவில் உள்ளது.
கோவிலில், 13 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேக நிகழ்வின், 13ம் ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் (ஜூன்., 5ல்) காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்து டன் துவங்கியது.தொடர்ந்து, சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமிநாராய ஹோமம் நடந்தது.
பெருமாளுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.சிறப்பு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு, பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.