பழநி : பழநி முருகன் கோயிலுக்கு சனி, ஞாயிறு தினங்களில், வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
நேற்று (ஜூன்., 9ல்) ஞாயிறு விடுமுறை நாளில் அதிகாலை முதல் மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள், ரோப்கார், வின்ச் ஸ்டஷேனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தினர். ரோப்கார் ஸ்டேசனில் குறுக்கு வழியில் செல்வதற்காக, மெயின் கேட்டில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் செக்யூரிட்டிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பொது தரிசனவழியில் 3 மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.