அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில், கம்பன் கழகத்தின் 354 வது சொற்பொழிவு கூட்டம் நடந்தது. புரவலர் தினகரன் தலைமை வகித்தார்.
துணை செயலர் செல்வம் வரவேற்றார். ஆசிரியர் ஆனந்த அபூர்வசாமி, ராமாயணத்தில் எட்டெழுத்து மந்திரம் என்ற தலைப்பில் பேசினார். சத்திய சாயி குழுவினரின் பஜனை நடந்தது. விவேகானந்தா கேந்திராவின் புத்தக கண்காட்சி இடம் பெற்றது. ஏற்பாடுகளை துணை செயலர்கள் கோடீஸ்வரன், நாகராஜ், பால்ராஜ் செய்தனர். செயலர் கணேசன் நன்றி கூறினார்.