Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு ... முத்துமாரியம்மன் கோவில் சக்தி கரக ஊர்வலம் முத்துமாரியம்மன் கோவில் சக்தி கரக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமறைநாதர் கோயிலுக்கு வாகனங்கள் தயாரிப்பு தீவிரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமறைநாதர் கோயிலுக்கு வாகனங்கள் தயாரிப்பு தீவிரம்!

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
11:06

மதுரை, மதுரை மாவட்டம் மேலுார் அருகேவுள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலுக்கு அத்தி மரத்தில் சிம்மம், நந்தி, யானை வாகனங்களை செதுக்கும் பணியில் ஸ்தபதிகள் இரு மாதங்களாக தீவிரமாக உள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோயிலின் துணை கோயிலான இக்கோயில் பழமையும், புராதன சிறப்பும் மிக்கது. திருவிழாக்களில் சிம்மம், நந்தி, யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வருவர். வாகனங்கள் பழுதாகி இருப்பதால் கோயில் சார்பில் புதிய வாகனங்கள் தயாரிக்க தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் நடவடிக்கை எடுத்தனர். இதற்கான டெண்டர் கோரப்பட்டது. அத்தி மரத்தில் இரு நந்திகள், யானை, சிம்ம வாகனங்களில் தலா ஒன்று தயாரிக்க சேலம் தம்மம்பட்டி ஸ்தபதி ரவி டெண்டர் எடுத்தார்.ரவி கூறியதாவது: கிருஷ்ணகிரியில் அத்திமரங்கள் அதிகம். அத்திமரம் சிவ வம்சத்தை குறிக்கும் பால் மரம் என அழைக்கப்படுகிறது. வைரம் பாய்ந்த அத்தி மரக்கட்டைகளில் சுவாமி வாகனங்கள் தயாரிக்கப்படும். காலப்போக்கில் மரம் இலகுவாகி விடும். சுவாமியுடன் வாகனத்தை துாக்கி செல்ல வசதியாக இருக்கும். திருவாதவூர் கோயிலுக்கு தலா 450 கிலோ எடையுள்ள இரு நந்தி வாகனங்கள், 600 கிலோ எடையுள்ள யானை வாகனம், 400 கிலோ எடையுள்ள சிம்ம வாகனம் செதுக்கும் பணியில் 7 சிற்பிகள் இரு மாதங்களாக ஈடுபட்டுள்ளனர். இப்பணி ஒரு மாதத்திற்குள் முடியும். பின் வர்ணம் பூசப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar