பதிவு செய்த நாள்
14
ஜூன்
2019
03:06
கடத்தூர்: கடத்தூரில் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, சுவாமிகள் வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தர்மபுரி மாவட்டம், கடத்தூரில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 10ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.
கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் (ஜூன்., 12ல்), அம்மனுக்கு பொங்கல் வைத்து, கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, பிடாரியம்மன் கோவிலில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக, கடத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவிலுக்கு சுவாமிகள் வேடம் அணிந்தும், அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். நேற்று (ஜூன்., 13ல்), மாவிளக்கு எடுத்தல் மற்றும் தீமிதி நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.