பதிவு செய்த நாள்
14
ஜூன்
2019
03:06
குமாரபாளையம்: ஒடசக்கரை சமயபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது. குமாரபாளையம் அருகே, தேவூர், சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
கல்வடங்கம் காவிரி ஆற்றிலிருந்து கொட்டாயூர், நல்லங்கியூர், வட்ராம்பாளையம்,
செட்டிபட்டி வழியாக தீர்த்தக்குடங்கள் மேள தாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டன.
இதையடுத்து பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் ஆகியவை நடந்தன. சிறுவர், சிறுமியர் சரபங்கா நதியில் நீராடி, சாலையில், 108 முறை படுத்து, எழுந்து நடந்து வந்தனர். அக்னி கரகம், மயில் அலகு, முதுகில் அலகு குத்தி சாமியை சிறிய தேர் மூலம் இழுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை மேற்கொண்டனர். பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.