பதிவு செய்த நாள்
14
ஜூன்
2019
03:06
நாமக்கல்: நாமக்கல், வரதராஜப்பெருமாள் கோவில் லட்சார்ச்சனை துவங்கியது. நாமக்கல், மலைக்கோட்டை வரத ராஜப்பெருமாள் கோவிலில், நேற்று (ஜூன்., 13ல்)லட்சார்ச்சனை விழா துவங்கியது. காலை, 7:00க்கு துவங்கி, மதியம், 12:00 மணி, மாலை, 5:30க்கு துவங்கி, இரவு, 7:30 மணி வரை லட்சம் மலர்களை கொண்டு வழிபாடு செய்யப்படும். நிறைவு நாளான இன்று (ஜூன்., 14ல்), பெயர் பதிவு செய்தவர்களுக்கு பிரசாதம், மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் வெங்கடேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.