பதிவு செய்த நாள்
15
ஜூன்
2019
03:06
திருச்சி: தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்களின் காசுகள் தொடர்பான கண்காட்சி திருச்சியில் துவங்கியது. திருச்சி பணத்தாள் சேகரிப்போர் சங்கம் சார்பில், உலக பணத்தாள், நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் மூன்று நாள் கண்காட்சி, நேற்று (ஜூன்., 14ல்) காலை துவங்கியது.
திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள சீனிவாசா மஹாலில் துவங்கிய கண்காட்சி யில், தஞ்சை நாணயவியல் ஆராய்ச்சியாளர் ஆறுமுக சீத்தாராமன் எழுதிய, தமிழக நாயக்க மன்னர்கள் காசுகள் என்ற நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலில், தமிழகத்தில் நாயக்கர்கள்
ஆண்ட செஞ்சி, தஞ்சை, மதுரை ஆகிய இடங்களில் புழக்கத்தில் இருந்த, 820 காசுகளின் படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியில் சோமாலியா நாட்டின் கித்தார் வடிவிலான
நாணயங்கள், பிரமிடு வடிவ நாணயம், மலேசியா நாட்டின் மிகப்பெரிய பணத்தாள் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பணத்தாள், நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் இடம் பெற்றிருந்தன.