பதிவு செய்த நாள்
15
ஜூன்
2019
03:06
குளித்தலை: குளித்தலை அடுத்த, போத்தராவுத்தன்பட்டி அருகே, பன்னீர்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூன்., 14ல்) நடந்தது.
விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜூன்., 13ல்) காலை, குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தத்தைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், யாக சாலை பூஜை துவங்கியது. பொது மக்கள் வழங்கிய பழம், திரவிய பொருட் களை குண்டத்தில் போட்டு யாகம் செய்யப்பட்டது. நேற்று (ஜூன்., 14ல்) காலை கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதேபோல், வீரியம்பாளையம் அருகே, கண்ணமுத்தாம்பட்டி அன்னகாமாட்சி, மாசி பெரியண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூன்., 14ல்) காலை நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர், விழாவில் கலந்து கொண்டனர்.