பதிவு செய்த நாள்
15
ஜூன்
2019
03:06
பெருந்துறை: காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெருந்துறை, ஆயிக்கவுண்டன்பாளையத்தில், 24 மனை தெலுங்கு செட்டியார்
சமூகத்துக்கு பாத்தியப்பட்ட, காமாட்சி அம்மன் கோவில் புதியதாக வடிமைத்து, திருப்பணிகள் நடந்தன. இந்நிலையில் கடந்த, 11ல் கும்பாபிஷேக விழா தொடங்கியது. யாக கால பூஜைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று (ஜூன்., 14ல்) காலை, கோவில் விமான கோபுரம், விநாயகர், காமாட்சியம்மன் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.