பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
03:06
திருத்தணி : திருத்தணி ஒன்றியம், மத்தூர் ஊராட்சிக்குட்பட்டது, மூலமத்தூர் கிராமம். இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாய தொழிலை நம்பியே வாழ்கின்றனர்.இந்நிலையில், இரு ஆண்டுகளாக, மழை இல்லாததால், விவசாய தொழில் முழுவதும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, கிராம மக்கள் மழை பெய்ய வேண்டும் என, அதே பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவிலில், நேற்று (ஜூன்., 16ல்) காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தினர். அதை தொடர்ந்து, கிராம பெண்கள், 250க்கும் மேற்பட்டோர், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து, மழை வேண்டும் என, சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.