மகானான தாயுமானவர், ஒருநாள் குளிரில் நடுங்கியபடி தெருவில் படுத்திருந்தார். அவரைக் கண்ட ஒருவர், தான் போர்த்தியிருந்த சால்வையை கொடுத்துச் சென்றார். சில நாட்கள் கழிந்தபின், அங்கு சால்வை இல்லாதது கண்ட அவர், “சுவாமி! மீண்டும் குளிரில் நடுங்கிறீர்களே; சால்வை எங்கே?” எனக் கேட்டார். “ஓ! அதுவா! திருவானைக்கா அகிலாண்டேஸ் வரிக்கு கொடுத்திட்டேன்” என்றார் தாயுமானவர். ’அம்பாளுக்கு சால்வை எதற்கு?’ என குழம்பினார் அவர். அதன் பிறகே அத்தெருவில் இருந்த மூதாட்டி ஒருவருக்கு தாயுமானவர் கொடுத்த விஷயம் தெரிய வந்தது. பெண்களை அம்பாளின் வடிவமாகவே கருதும் தாயுமானவரின் தாயுள்ளம் கண்டு நெகிழ்ந்தார் அவர்.