Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீதை காட்டும் பாதை தாயுமானவரின் தாயுள்ளம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அறிவு காட்டும் பாதையில் முன்னேறு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
03:06

* உணர்ச்சி வசப்பட வேண்டாம். அறிவு காட்டும் பாதையில் முன்னேறிச் செல்.
* இன்முகத்துடன் பேசினால் உலகமே உங்களுக்கு வசமாகி விடும்.
* கடமையை உணர்ந்து அதற்குரிய காலத்தில் செய்தால் நிம்மதியாக வாழலாம்.  
* உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு; இதுவே நல்லவர் இயல்பு.
* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.
* முறை தவறி செய்யும் செயலின் விளைவு, துப்பாக்கி குறி தவறி வெடிப்பது போன்றது.
* வஞ்சகர் எதிரியாகி விடுவதில் வியப்பில்லை; நண்பராக வளர்ந்தால் தான் பிரச்னையே.
* வாழ்த்துவது வீண் போகாது. வாழ்த்துவதால் நம்மை சுற்றிலும் நல்ல அலைகள் உண்டாகும்.
* ஒழுக்கமே உயர்வதற்கான வழி. இதை காக்கும் கவசமே திருமணம் என்னும் பந்தம்.
* தீர்க்க முடியாத துன்பம் எதுவுமில்லை. தீர்க்கும் வழியை அறியாதவராக பலர் உள்ளனர்.
* வாழ்வு சிக்கல் நிறைந்த போராட்டம். உடலும், உயிரும் சேர்ந்ததே ஒரு சிக்கல் தானே.
* கோபத்தால் யாரையும் திருத்த முடியாது. ஒருவேளை பயத்தால் சிலர் திருந்தியது போல இருக்கலாம்.
* எந்த சூழலிலும் ஒருவருக்கு கோபம் வராவிட்டால், அவரை ஞானி என்றே சொல்ல வேண்டும்.
* விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். மாறாக வெறுப்பை ஒழித்தால் வாழ்வு மேன்மை பெறும்.
* ஆசையை ஒழிக்க யாராலும் முடியாது. அதற்கு தேவையும் இல்லை. அதை சீர்படுத்துவது சிறப்பு.  - நல்வழி காட்டுகிறார் வேதாத்ரி மகரிஷி

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar