சிவபார்வதியின் பிள்ளை என்பதால் விநாயகரை ‘பிள்ளையார்’ என சிறப்பாக குறிப்பிடுகிறோம். இப்பெயருக்கு வேறொரு விதத்திலும் விளக்கம் அளிப்பர். சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி, காஞ்சிபுரம்மீது படையெடுத்து நகரையே அழித்து நிர்மூலமாக்கினான். அப்போது, காஞ்சியை ஆண்ட பல்லவன் மகேந்திரன், தன் மகன் நரசிம்மனை புலிகேசியின் தலைநகரான வாதாபி மீது படையெடுக்கச் செய்தான். தளபதி பரஞ்சோதி தலைமையில் நரசிம்மன் புறப்பட்டான். வாதாபியை தீக்கிரையாக்கி, ஏழுநாள் எரியச் செய்தான். போரில் இரண்டாம்புலிகேசி கொல்லப்பட்டான். அவனது தம்பி நீலகேசியின் கை வெட்டப் பட்டதால், புறமுதுகிட்டு ஓடினான். போருக்குப்பின், வாதாபியிலிருந்த விநாயகர் சிலையை நரசிம்மன் எடுக்க முயன்றான். அது சிறிதும் அசையவில்லை. சிவ பக்தரான தளபதி பரஞ்சோதி ‘பிள்ளையாரப்பா.. வா’ என்று அன்புடன் சொல்லி துõக்கியதும், சிலை அசைய ஆரம்பித்தது. சிதம்பரத்தில் இவர் ‘வாதாபி கணபதி’ என்னும் பெயரில் வீற்று இருக்கிறார்.