திருவெண்ணெய்நல்லூர் : - கிருபாபுரீஸ்வரர் கோவிலில் வரும் 27ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் சுந்தரரை தடுத்தாட்கொண்டு அருளாசி வழங்கிய சிறப்புடையது. இக் கோவிலில் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன், பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. தினமும் சுவாமி வீதியுலாவும், 31ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் கோபுர தரிசனமும் நடக்கிறது. தொடர்ந்து 2ம் தேதி திருக்கல்யாணமும், 4ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. இதனையடுத்து 7ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பத்ராசலம் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.