திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகே தேவரம்பூரில் மழை பெய்து செழிக்க கோட்டைக் கருப்பருக்கு 30 கிடா வெட்டி ஆனிப்படைப்பு விழா நடந்தது.
இக்கிராமத்தின் பொன்னப்பன் அம்பலம் வகையறாக்கள் ஆண்டு தோறும் மழை பெய்து செழிக்க வேண்டி கோட்டைக் கருப்பருக்கு ஆனி படைப்பு வழங்குவது வழக்கம்.கடந்த ஜூன் 28 ல் கோயில் வீட்டில் காப்புக் கட்டி உறவினர்கள் விரதம் துவக்கினர். விரதத்திற்கு பின் நேற்று முன்தினம் (ஜூலை.,4ல்) இரவு சாமியாட்டம் நடந்தது. நேற்று (ஜூலை.,5ல்) அதிகாலையில் சுவாமி புறப்பட்டு தென்மாப்பட்டு அக்கசாலை விநாயகர் கோயிலுக்கு வந்து சாமி அழைப்பு நடந்தது.
அங்கிருந்து கோட்டைக் கருப்பண்ணசுவாமி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் அங்கு கருப்பரு க்கு கிடா பலியிட்டனர்.பின்னர் தேவரம்பூர் சென்று கிடாக்களை சமைத்து படையலிட்டு கருப்பரை வழிபட்டனர்.