பதிவு செய்த நாள்
21
மார்
2012
12:03
திருவள்ளூர் : தீர்த்தீஸ்வரர் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில், நேற்று காலை, பூத வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா வந்தார். திருவள்ளூர், திருபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள், 18ம் தேதி சிம்ம வாகனத்தில் அம்பாளுடன் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2வது நாளான 19ம் தேதி, இரவு சூரிய பிரபையில் உற்சவர் எழுந்தருளினார். மூன்றாவது நாளான நேற்று காலை, பூத வாகனத்திலும், இரவு அதிகார நந்தி சேவையிலும் தீர்த்தீஸ்வரர், திருபுரசுந்தரியுடன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, நாக வாகனத்திலும், இரவு சந்திரபிரபையிலும் உற்சவர் திருவீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை, பரம்பரை தர்மகர்த்தா ராமநாத குருக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.