பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
02:07
வீரபாண்டி: கரபுரநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிவகாமி சமேத நடராஜ ருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் நடராஜருக்கு சித்திரையில் திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி மற்றும் மார்கழியில் வரும் திருவாதிரை ஆகிய ஆறு நட்சத் திரங்களில், சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதில், ஆனி உத்திரம் நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனத்துக்கு முதன்மையான இடமுண்டு. நல்ல மழை பொழியவும், உலக அமைதி வேண்டியும் நடத்தப்படுகிறது. சிதம் பரத்தில் மூலவராக நடராஜர் உள்ளார். அங்கு பஞ்சலோக சிலைதான் உள்ளது. கரபுரநாதர் கோவில் நடராஜர் மூலவர் கற்சிலையாகவும், உற்சவர் பஞ்சலோக சிலையாகவும் உள்ளது தனிச்சிறப்பு. நேற்று (ஜூலை., 8ல்) காலை, 11:00 மணிக்கு சிவகாமி சமேத நடராஜருக்கு பால், தயிர், கரும்புச்சாறு, பானகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது.
ஆடல் வல்லான் நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் சர்வ அலங்காரம் செய்து, பூஜை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* பனமரத்துப்பட்டி அருகே, நத்தமேடு சிதம்பரேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா, நேற்று (ஜூலை., 8ல்) நடந்தது. அதிகாலை நடராசர், சிவகாமி அம்பாள் உற்சவர் சிலைக்கு, பஞ்சாமிர்தம், பால், தயிர், பழச்சாறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. அடுத்து, சிவகாமி, சிதம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெண்கள் பங்கேற்ற திருமாங்கல்யம் பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.