பதிவு செய்த நாள்
11
ஜூலை
2019
01:07
ஈரோடு: திருப்பதி பிரம்மோற்சவ, தீபாவளி தரிசன டிக்கெட் பெற பக்தர்களுக்கு அழைப்பு விடுக்க ப்பட்டுள்ளது. இந்தாண்டு திருப்பதியில், அக்.,1 முதல், 8 வரை அதாவது புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள், பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய கூடுவது வழக்கம். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, முன் கூட்டியே முன் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.
ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஸ்ரீவாரி டிரஸ்ட் அலுவலகத்தில் அக்.,1 முதல், 8 வரை சுவாமி தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அக்., 4ல் கருட சேவையன்று மட்டும் தரிசன டிக்கெட் முன்பதிவு இல்லை. கூட்ட நெரிசலை தவிர்க்க, முன் கூட்டியே பக்தர்கள் தரிசன டிக்கெட்களை பெற்று கொள்ளலாம். அக்., 27ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் முன் பதிவு செய்து கொள்ள, ஸ்ரீவாரி டிரஸ்ட் ஈரோடு பொறுப்பாளர் உமாபதி கேட்டு கொண்டுள்ளார்.