பதிவு செய்த நாள்
11
ஜூலை
2019
01:07
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மன் திருவீதி உலா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் திருவிழா, கடந்த, 7ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று (ஜூலை., 10ல்) அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கடைவீதி, கொடிக்கால் தெரு, விட்டுகட்டி பகுதிகள் வழியாக, தேர் பவனி சென்றது. விழாவில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். இன்று (ஜூலை., 11ல்) காலை, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.