பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
03:07
திருக்கோவிலுார்;திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவித்ரோற்சவ விழா நடக்கிறது.அதனையொட்டி, நேற்று முன்தினம் (ஜூலை., 14ல்) மாலை 6:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.
இரண்டாம் நாளான நேற்று (ஜூலை., 15ல்) காலை மூலமூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரம், இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், மூலமூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பவித்திர மாலை சாற்றும் வைபவம், பவித்ரோற்சவ சாந்தி வேள்வி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு மூன்றாம் காலை யாகசாலை பூஜை, வித்யா சிவதத்துவ பவித்ரம் சமர்ப்பித்தல், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.விழாவின் நிறைவாக இன்று காலை 9:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜைகள், சண்டிகேஸ்வரர் வழிபாடு, ஷோடசோபவுபசார தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.