பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
02:07
சூலுார்:ஆடி வெள்ளியை ஒட்டி, சூலுார் வட்டார கோவில்களில், ஏராளமான பக்தர்கள் குடும்பத் துடன் சென்று வழிபட்டனர்.ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, காட்டூர் மாகாளியம் மன், மேற்கு அங்காளம்மன், பெரிய மாரியம்மன், ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நேற்று (ஜூலை., 19ல்) நடந்தன.
கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில், நடந்த பூஜைகளில் ஏராளமான பெண்கள் குடும்ப த்துடன் பங்கேற்று வழிபட்டனர்.மாவிளக்கு ஏற்றி, பெண்கள் வழிபட்டனர். மஞ்சள், குங்குமம், வளையல்கள், புஷ்பம் பிரசாதமாக வழங்கப்பட்டது.