பொள்ளாச்சி அருகே கமல காமாட்சியம்மன் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2019 12:07
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கஞ்சம்பட்டி, கமல காமாட்சியம்மன் கோவிலில், நாளை (ஜூலை., 24ல்)மண்டல அபிஷேக நிறைவு விழா நடக்கிறது.
பொள்ளாச்சி, கஞ்சம்பட்டி கமல காமாட்சியம்மன் கோவிலில் ஜூன், 6ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. அதைத் தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் துவங்கப்பட்டது.நாளை, 24ம் தேதி மண்டல அபிஷேக நிறைவு விழா நடக்கிறது. காலை, 7:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.