பதிவு செய்த நாள்
29
ஜூலை
2019
02:07
பேரம்பாக்கம் : கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள கன்னியம்மன் கோவிலில், 33ம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக, 15ம் தேதி மாலை, விநாயகர் அபிஷேகத்துடன் துவங்கியது. பின், தினமும், காலையில், அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மாலையில், அம்மன் கரகம் வீதியுலாவும் நடந்தது.தீமிதி திருவிழாவில், 25ம் தேதி மாலை, அம்மனுக்கு திருக்கல்யாண வைபவமும் நடந்தது. தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள், தீ மிதித்தனர்.பின், சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார். இதில், பேரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், விரதமிருந்து தீமிதி திருவிழாவில் பங்கேற்றனர்.