கடலுார் திருவந்திபுரம் கோவிலில் 3ம் தேதி ஆடிப்பூர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2019 04:08
கடலுார் : திருவந்திபுரம் கோவிலில் ஆடிப் பூரத் திருவிழா வரும் 3ம் தேதி நடக்கிறது. திருவந்தி புரம் கோவிலில் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் வரும் 3ம் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு காலை 6 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு பிரசாத மகா நிவேதனம், மாலை 4 மணிக்கு சேவை சாற்றுமுறை, 5 மணிக்கு பெருமாள் ஆண்டாள் வீதியுலா புறப்பாடு நடக்கிறது.இரவு பள்ளி யறை சேவையில் வித்வான் ஓ.எஸ்.தியாகராஜன் குழுவினரின் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி நடக்கிறது.