அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் திருவாசகம் வாசித்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2019 04:08
அன்னுார்:அன்னுாரில், திருவாசகம் வாசித்தல், நிகழ்ச்சி நடந்தது. சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், ஒவ்வொரு மாதமும், திருவாதிரை நட்சத்திரத்தன்று, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் வாசிக்கும் நிகழ்ச்சி அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் நடைபெறும்.இம்மாத நிகழ்வு நேற்று (ஜூலை., 31ல்)நடந்தது. காலை 6:45 மணிக்கு திருவாசகம் வாசித்தல் துவங்கி யது. அன்னுார், புளியம்பட்டி, கருவலுாரைச் சேர்ந்த பக்தர்களும், சிவனடியார்களும் பங்கேற்று திருவாசகத்தை முழுமையாக வாசித்தனர்.மதியம் 1:00 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் மன்னீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அன்னதானத்தில் திரளான மக்கள் பங்கேற்றனர்.