பதிவு செய்த நாள்
02
ஆக
2019
03:08
ப.வேலூர்: பொத்தனூர், அண்ணாநகரில் பேக்காட்டு கருப்பணார் மற்றும் கன்னிமார் கோவிலின், 22வது ஆண்டு பொங்கல், மாவிளக்கு திருவிழா, கடந்த, 28ல் துவங்கியது. 29 - 31 தேதிகள் வரை தினசரி மாலை சிறப்பு அபிஷேக,ஆராதனை, அலங்காரம் நடந்தது. நேற்று (ஆக., 1ல்) அதிகாலை, கணபதி ஹோம பூஜை, காவிரி ஆற்றிற்கு சென்று பக்தர்கள் புனித தீர்த்தம் எடுத்து வருதல்; மாலை, சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. இன்று (ஆக., 2ல்) காலை, பொங் கல் மாவிளக்கு பூஜை, மாலை, 5:00 மணிக்கு மேல் மஞ்சள் நீராடல் மற்றும் சுவாமி திருவீதி உலா வருதல், நாளை (ஆக., 3ல்) காலை கிடா வெட்டுதல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.