பதிவு செய்த நாள்
02
ஆக
2019
02:08
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், புரியில் உள்ள, ஜகன்னாதர் கோவிலுக்குள், வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் கொண்டு செல்வதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. வெற்றிலை மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள், கோவிலுக்குள்ளேயே, எச்சிலை துப்புவதால், கோவில் வளாகம் அசுத்தமாகிறது; இதை தடுக்கவே, இந்த 0தடை விதிக்கப்படுகிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இந்த தடை, நேற்று முதல் அமலுக்கு வந்தது. தடையை மீறி,கோவிலுக்குள் வெற்றிலை மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோருக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.