பாகூர்: கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழா, வரும் 9ம் தேதி நடக் கிறது. புதுச்சேரி அடுத்த கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழி யம்மன் கோவிலில் தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று 1ம் தேதி துவங்கியது.மாலை 6.00 மணி க்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, கோவில் கொடிமரத்தில் கொடியேற்றி, மகா தீபாரா தனை நடந்தது.முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, வரும் 9ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடக் கிறது. அன்று மதியம் 12.00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை திருக் கல்யாண உற்சவம் நடக்கிறது. 10ம் தேதி தெப்பல் உற்சவம், 11ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.