பதிவு செய்த நாள்
02
ஆக
2019
03:08
புதுச்சேரி: எல்லைப்பிள்ளைசாவடி சாரதாம்பாள் கோவிலில், ஸ்ரீமத் பாகவத உபன்யாசம், நாளை (ஆக., 3ல்) தொடங்குகிறது.
புதுச்சேரி ஸ்ரீகிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலி சார்பில், எல்லைப்பிள்ளைச் சாவடி சாரதாம் பாள் கோவிலில், நாளை (3ம் தேதி) முதல், 10ம் தேதி வரை பரனுார் மகாத்மா ஸ்ரீகிருஷ்ண பிரேமி சுவாமிகளின் குமாரர் ஸ்ரீ ஹரி அண்ணாவின், ’ ஸ்ரீமத் பாகவத உபன்யாசம்’ நிகழ்ச் சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமும் இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை பல தலைப்புகளில் உபன்யாசம் நடக்கிறது. 3ம் தேதி பரிஷித் சரித்ரம், 4ம் தேதி தஷயக்ஞம், 5ம் தேதி துருவ சரித்ரம், அஜாமிளோ பாக்யானம், 6ம் தேதி கஜேந்திர மோட்சம், வாமனா அவதாரம், 7ம் தேதி கிருஷ்ண அவதாரம், 8ம் தேதி கிருஷ்ண லீலைகள், 9ம் தேதி ருக்மணி கல்யாணம் ஆகிய தலைப்புகளில் உபன்யாசம் நடக்கிறது.
மேலும், கதவு எண் 3, ஸ்ரீஜெயராம் நகர், முதல் குறுக்கு தெரு, சாரம், புதுச்சேரி என்ற முகவரி யில், தினமும் காலை 7.00 மணி முதல் 12.00 மணிவரை ஸ்ரீமத் பாகவத மூல பாராயணமும், 8 மற்றும் 9ம் தேதிகளில், மாலை 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அஷ்டபதி பஜனை யும் நடக்கிறது.10ம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை உஞ்சவ்ருத்தி, திவ்யநாம பஜனை, ஸ்ரீராதா கல்யாண மகோற்சவம் நடக்கிறது. தினமும் இரவு உபன் யாசத்திற்கு பிறகு கிருஷ்ண டோலோத்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை புதுச்சேரி கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியினர் செய்து வருகின்றனர்.