Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூரில் ஜெருசலேம் பயணம் ... உடுமலை ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’பகவானை அடைய பக்தியே வழி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2019
04:08

திருப்பூர்:’ஜீவனின் இடமாற்றம் தான் ஜனனமும், மரணமும்; பிறப்புக்கு  மகிழ்ச்சியோ மரணத்துக்கு கவலையோ படக்கூடாது,’ என, சொற்பொழி வில்  கருத்து தெரிவிக்கப் பட்டது. திருப்பூர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், ஸ்ரீமத்  பாகவத உபன்யாசத்தில், மதுரை அழகர் கோவில் கோமடம் பராசர பட்டர்  பேசியதாவது:மனம் என்பது குரங்கு போன்றது. அங்கு மிங்கும் அலைபாயும் குணம்  கொண்டது. அதைக் கட்டுப்படுத்தி வைத்து பகவானை நோக்கிச் செலுத்த  வேண்டும்.

ஜீவன் என்பது வேறு; சரீரம் என்பது வேறு. இந்த இரண்டையும் இணைப்பதாகத்  தான் மனம் உள்ளது. இந்த மனம் மூலமாகத் தான் நாம் பகவானைக் காண  முடியும்; அவன் திருப்பாதம் அடைய முடியும்.மனதை கட்டுப்படுத்த யோகம்  செய்ய வேண்டும். அதைக் கட்டுப்படுத் தினால் மேலும் பாயும். அதற்கு ஒரே வழி,  பகவானை நோக்கி மனதைச் செலுத்த வேண்டும். ஆசைகளை துறந்தவர்  சன்னியாசி.ஆசை வந்தால், நியாயமான ஆசை என்றால், அதை நியாயமான  முறையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். சன்னியாசியாக இருந்து  பகவனைத் தவிர வேறு எதன் மீதும் ஆசைப்படக்கூடாது.சன்னியாசியாக  வேடமிட்டு, அபிலாசைக்கு ஆளாவதை விட சம்சாரியாக இருப்பது உத்தமம்.

சம்சாரியாக இருந்து பகவானை அடைவதற்கான வழி, பகவான் நாமம் பூஜிப்பது;  பகவான் கதைகள், உபன்யாசம் கேட்பது; பகவான் உருவத்தை மனதில் கொண்டு  வந்து தியானிப்பது என இருக்க வேண்டும்.இந்த முறையில் எளிய வகையில்  பக்திசெலுத்தி இறைவனை அடையலாம்.ஜனனமும், மரணமும் உயிரின்  இடமாற்றம். பிறப்புக்கு மகிழ்வதோ, இறப்பு க்கு கவலைப்படுவதோ  தேவையற்றது.இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar