திருவெண்ணெய்நல்லூர் :திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவில் பள்ளியறை பூஜைக்கு பக்தர்கள் பல்லக்கு வழங்கினர். திருவெண்ணெய்நல்லூர் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தினமும் இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜைகள் நடந்து வருகின்றன. சிவன் கோவிலிலிருந்து கிருபாபுரீஸ்வரரின் சிறிய உற்சவமூர்த்தியை சாதாரண பல்லக்கில் வைத்து, அம்மன் சன்னதிக்கு கொண்டு வந்து அங்குள்ள பள்ளியறை ஊஞ்சலில் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இந்த பூஜைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சைவசித்தாந்த பயிற்சி மையத்தை சேர்ந்த சிவனடியார்கள் ராமசாமி, கண்ணன் உள்ளிட்ட பக்தர்கள் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டு பஞ்சுமெத்தை உள்ளடங்கிய புதிய தேக்கு மர பல்லக்கினை, குருக்கள் ரவியிடம் வழங்கினர்.