பதிவு செய்த நாள்
10
ஆக
2019
02:08
சூலுார்:ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி பூஜையை ஒட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
சூலுார் செங்கத்துறை மாகாளியம்மன் கோவிலில் வீரமாத்தியம்மன் கோவிலில், பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அலங்கார பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சோமனுார் ராமச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. காமாட்சி அலங்காரத்தில் அம்மன் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். காடாம்பாடி ஏரோ நகர் சாந்த சிவ காளியம்மன் கோவில், சூலுார் பெரிய மாரியம்மன், மேற்கு அங்காளம்மன், குளத்துார் மகாலட்சுமி கோவில், சோமனுார் சேடபாளையம் ரோடு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில் நடந்த வரலட்சுமி பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மஞ்சள் சரடு, வளையல்கள் மற்றும் மஞ்சள் குங்கும பிரசாதம் வழங்கப்பட்டன. மேட்டுப் பாளையம் அன்னுார் ரோடு காபிஒர்க்ஸ் பகுதியில் சடையச்சி மாரியம்மனுக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. மேட்டுப்பாளையம் சிவன்புரம், ஆசிரி யர் காலனியில் ராஜ அஷ்ட விமோசன் மகா கணபதி கோவிலில், விஷ்ணுதுர்க்கைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மைதானம் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அன்னுார், தென்னம்பாளையம் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு முருங்கை, பீட்ரூட், பூசணி, கறிவேப்பிலை, பாகற்காய் உள்ளிட்ட, 21 வகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்காளம்மன் கோவி லில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பிள்ளையப்பம்பாளையம் செல்வ நாயகி யம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
மன்னீஸ்வரர் கோவிலில் அருந்தவச்செல்வி அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜோதிபுரத்தில் உள்ள ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவிலில், வரலட்சுமி விரதத்தையொட்டி, காணிக்கையாக வழங்கப்பட்ட வெள்ளிக்கவசத்துடன் பட்டத்தரசி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியநாயக்கன்பாளையம், பாலமலை ரோட்டில் உள்ள அருள்மிகு வீரமாசித்தியம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வையம்பாளையத்திலுள்ள மகாலட்சுமி அம்மன் கோவிலில், நேற்று (ஆக., 9ல்) காலை திருமஞ்சன பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, கலச பூஜை ஆகியன நடந்தன.