உடுமலை:உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஆடி வெள்ளிக்கிழமைகளில், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
நான்காவது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரத நாளையொட்டி, திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்தார்.திரளான பெண்கள், திரு விளக்கு பூஜையில், பங்கேற்று திருவிளக்கேற்றி, வழிபாடு நடத்தினர். வரும் 16ம் தேதி, ஐந்தா வது ஆடி வெள்ளியையொட்டி, மாலை 6:30 மணிக்கு, தம்பதி பூஜை நடக்கிறது.