பதிவு செய்த நாள்
10
ஆக
2019
03:08
கிருஷ்ணகிரி: ஆடி நான்காவது வெள்ளியை முன்னிட்டு, நேற்று (ஆக., 9ல்) மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில், ஆடி நான்காவது வெள்ளி யையொட்டி நேற்று (ஆக., 9ல்) சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பச்சையம்மன் அலங்காரத்தில், பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கூழ் மற்றும் பொங்கலை அம்மனுக்கு படைத்து, பின்னர் பக்தர்களுக்கு வழங்கினர். மேலும், உப்பு, மிளகை கோவிலுக்கு வழங்கி வேண்டுதல் நிறைவேற்றினர். நீண்ட வரிசையில் காத்திருந்து பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் காலையில் பூஜை செய்து அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங் காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.