அரூர் வரலட்சுமி விரதம்: மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2019 03:08
அரூர்: வரலட்சுமி விரதத்தையொட்டி, அரூரில் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் பழைய பேட்டை மகாசக்தி மாரியம்மன் கோவிலில், வரலட்சுமி விரதத்தை யொட்டி, நேற்று (ஆக., 9ல்) அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது.
இதில், பங்கேற்ற பெண்களுக்கு ஜாக்கெட் துணி, தாலி கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.