உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஆதிகேசவ பெருமாள்கோவிலில் கோ பூஜை நடந்தது. உளுந்துார்பேட்டை ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் கோ பூஜை நடந்தது.
பூஜையில், ஏராளமான பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். கோவில் அர்ச்சகர் ஸ்ரீசைலன் பூஜைகளை செய்தார்.கோமாதாவுக்கு பழ வகைகள் வைத்து படையலிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.