திண்டிவனம் அன்னை சாரதாதேவி சேவா சத்சங்கத்தின் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2019 02:08
திண்டிவனம்: திண்டிவனம் அன்னை சாரதாதேவி சேவா சத்சங்கத்தின் 6ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
இதையொட்டி, நேற்று (ஆக., 11ல்) மாலை மயிலம் ரோட்டில் உள்ள சுலோச்சனா பங்காரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியி்ல், சென்னை ராமகிருஷ்ண மடத்தின் ஸ்ரீமத் சுவாமி அபவர்கானந்தஜி ஆசியுரை வழங்கினார்.
உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்தின் யாதீஸ்வரி கைவல்யப்ரியா அம்பா தலைமையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, மாணவியர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை சாரதாதேவி சேவா சத்சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.