பதிவு செய்த நாள்
12
ஆக
2019
02:08
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிபேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில், 15ம் ஆண்டு வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, மாலை, 5:00 மணி க்கு, கணபதி மற்றும் வரலட்சுமி ஹோமங்கள், 6:00 மணிக்கு வரலட்சுமி பூஜை நடந்தது.
அப்போது மூலவர் - ஆதிலட்சுமி அலங்காரத்திலும், உற்சவர் - மஹாலட்சுமி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், பெண்கள் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, மஞ்சள், குங்குமம், வளையல், மாங்கல்ய கயிறு ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.