பதிவு செய்த நாள்
12
ஆக
2019
02:08
கடத்தூர்: கடத்தூர் அருகே, ஆடி திருவிழாவையொட்டி, அர்சுனன் தபசு நாடகம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில், கணபதி, லட்சுமி நாராயணர், சோமேஸ்வரர், மாரியம்மன், காலபைரவர் மற்றும் நாகேஸ்வரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் நடக்கும் ஆடி திருவிழா நேற்று முன்தினம் (ஆக., 10ல்), அம்மனுக்கு பாலாபிஷேகம், பொங்கல் வைத்தல், பூ மிதித்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, இரவு அர்சுனன் தபசு நாடகம் நடந்தது. நேற்று (ஆக., 11ல்) காலை, 9:00 மணிக்கு, பக்தர்கள் தீர்த்தக் குடம், பால்குடம் மற்றும் பூங்கரகம் எடுத்து வந்த பின், அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. காலை, 11:30 மணிக்கு, கணபதி ஹோமம், ராகு, கேது தோஷ பரிகாரம், நவகிரக ஹோமம் நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.