பதிவு செய்த நாள்
12
ஆக
2019
02:08
அந்தியூர்: குருநாதசுவாமி கோவில், விழா நிறைவு நாள் விழாவில், கடும் போக்குவரத்து நெரிசலால், மக்கள் அவதிப்பட்டனர்.
அந்தியூர், புதுப்பாளையம், குருநாதசுவாமி கோவில், ஆடிப்பெருந் தேர்த்திருவிழா, கடந்த, 7ல் தொடங்கியது. நேற்றுடன் (ஆக., 11ல்) விழா நிறைவடைந்தது.
கடந்த நான்கு நாட்களாக, மழை பெய்ததாலும், விடுமுறை இல்லாததாலும், மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. நேற்று (ஆக., 11ல்) விடுமுறை என்பதாலும், மழை பெய்யாமல் வெயில் வாட்டியதாலும், மக்களின் கூட்டம் அதிகரித்தது. காலை, 6:00 மணி முதலே, மக்கள் வரத் தொடங்கினர்.
பவானி பகுதியில் இருந்து, கோவிலுக்கு வரும் வாகனங்கள், அண்ணாமடுவு பகுதிக்கு வந்த தும், போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து நின்றன. இதனால் பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா, ஜி.ஹெச்., கார்னர் மற்றும் பர்கூர் சாலை, வெள்ளித்திருப்பூர் ரோடு உட்பட அனைத்து சாலை களிலும், 3 கி.மீ., தூரம் வரை வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனால் தூரத்தை வாகன ஓட்டிகள் கடக்க, 4 மணி நேரமானது. போக்குவரத்து நெரிசலால், வெள்ளைபிள்ளையார் கோவில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செல்லாமல், பயணிகளை வழியிலேயே இறக்கி விடப் பட்டனர். இதனால் கொளுத்திய வெயிலில், கோவிலுக்கு பக்தர்கள் நடந்து சென்றனர். மாலை வரை அந்தியூர் பகுதி சாலைகளில், மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தது.