பதிவு செய்த நாள்
12
ஆக
2019
02:08
ஈரோடு: ஐயப்ப தர்ம பிரசார ரத யார்த்திரை, செப்.,11ல் தமிழகத்தில் துவங்க உள்ளதாக, சபரி மலை ஐயப்ப சேவா சமாஜ தேசிய இணை பொது செயலாளர், ஈரோட்டில் தெரிவித்தார்.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ, ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஈரோட் டில் நடந்தது. மாவட்ட தலைவர் பூவேந்தன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர்கள் பாலசுப்பிரமணியம், ரத்தினம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை தொடர்ந்து, சமாஜத்தின் தேசிய இணை பொதுசெயலாளர் துரை சங்கர் கூறியதாவது: சபரிமலை சன்னிதானத்துக்கும், வழிபாட்டு முறைகளுக்கும், எவ்வித பங்கமும் வராமல், சபரிமலையை பாதுகாக்க, அனை த்து நடவடிக்கைகளையும் சமாஜம் செய்து வருகிறது.
இந்து தர்மம் தழைத்தோங்க தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில், அனைத்து மாவட்டத்திலும் ஐயப்ப தர்ம ரத யாத்திரை வரும் செப்.,11 முதல் அக்.,10 வரை செல்லவுள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவாரூர் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் யாத்திரை செல்கிறது. அடுத்த கட்டமாக அக்.,11 முதல் நவ.,10 வரை சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம், நாகபட்டினத்துக்கு செல்கிறது. இரண்டு மாவட்டத்துக்கு இரண்டு ரதங்கள் என, 18 ரதங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. தினமும் ரதங்கள், குறைந்தபட்சம் நான்கு இடங்களுக்கு செல்லும். செப்.,11ல் அனைத்து மாவட்டத்திலும் ஒரே நேரத்தில் ரத யாத்திரை துவங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.