பதிவு செய்த நாள்
13
ஆக
2019
03:08
ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், அருள்நெறி திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில், அறுபத்து மூவர் விழா, ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, கடந்த, 7ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து திருமுறை முற்றோதுதல், திருவிளக்கு வழிபாடு, மயிலை பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலாய சுவாமிகள் அருளுரை, மருதாச்சல அடிகளார் அருளுரை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அருளுரை, தேவார பண்ணிசை நடந்தது. முக்கிய நிகழ்வுகள் நேற்று (ஆக., 12ல்) நடந்தன.
காலை, 6:00 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து, 108 கலச தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதை யடுத்து அறுபத்து மூன்று நாயன்மார்கள் உற்சவர்களுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், காவிரி தீர்த்தம், 16 வகை திரவியங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து அலங்காரம், மஹா தீபாராதனை, இரவில் திருவீதியுலா நடந்தது. ஒரே சப்பரத்தில் அறுபத்து மூவரும் எழுந்தருளி ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பி.எஸ்., பார்க், பிரப்ரோடு, காமராஜர் வீதி வழியாக கோவிலில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் நின்ற பக்தர்கள், நமசிவாய மந்திரத்தை உச்சரித்து நாயன்மார்களை வழிபட்டனர்.