ஊட்டி: ஊட்டி அருகே முள்ளிகொரை சிக்கம்மன் சித்தர் பீடம் கோவிலில், 44வது ஆடிபெரு விழா நடந்தது.
ஊட்டி அருகே முள்ளிகொரை பகுதியில் சிக்கம்மன் சித்தர் பீடம் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிமாதம் பல்வேறு சிறப்பு பூஜைகள்; விழாக்கள் நடக்கும்.
இந்நிலையில், 44ம் ஆடிபெருவிழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் (ஆக., 11ல்) அலங்கார பூஜை யுடன் துவங்கியது. நேற்று (ஆக., 12ல்) காலை, 9:00 மணிக்கு ஆற்றங்கரையில் இருந்து அன்னையின் தீச்சட்டி கரகம் ஏந்தி வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பகல், 12:00 மணிக்கு பாலபிஷேகம், 1:00 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஆக., 13ல்), காலை சிறப்பு பூஜை நடக்கிறது.
மாலை, 6:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.