பதிவு செய்த நாள்
13
ஆக
2019
03:08
நாமக்கல்: தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள, தமிழக அரசு, நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத் தின் கீழ், பயன்பெற விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
600 கிறிஸ்தவர்களில், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரர்கள் புனித பயணம் மேற் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த புனித பயணம், இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்ல ஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. அதற்கான விண்ணப்ப படிவம், கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து பெறலாம்.
மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள மூலமும் பதிவிறக்கம் செய்து பயன்படுத் தலாம். பூர்த்தி செய்து, உரிய இணைப்புகளுடன், தபாலில், கிறிஸ்தவர்களின் புனித பயணத் திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம், 2019-20 என குறிப்பிட்டு, ஆணையர், சிறுபான்மை யினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரிக்கு, வரும், 30க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு, நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.