பதிவு செய்த நாள்
13
ஆக
2019
03:08
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, வள்ளுவர் நகர் செல்லியம்மன் கேவிலில், ஆடி திருவிழாவை முன் னிட்டு, நேற்று (ஆக., 12ல்) கொடியேற்றம் நடந்தது. இன்று (ஆக., 13ல்) காலை, 10:00 மணிக்கு, கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், நாளை (ஆக., 14ல்) காலை, 9:00 மணிக்கு, பொங்கல் வைத்தல் மற்றும் செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்க உள்ளது.
தொடர்ந்து பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மாலை, 6:00 மணிக்கு, அம்மன் வீதி உலா மற்றும் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஊர்மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.