குளித்தலை அருகே, கருப்பசாமி கோவிலில் கிடாவெட்டி பக்தர்கள் நேர்த்தி கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2019 03:08
குளித்தலை: குளித்தலை அருகே, புழுதேரியில் உள்ள கரையூரான் நீலமேகம், கருப்பசாமி கோவிலில், ஆடி, 28யொட்டி, பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர். குளித்தலை அடுத்த, புழுதேரி பஞ்., கரையூரான் நீலமேகம், கருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு ஆடி 28ஐ முன்னிட்டு 20ம் ஆண்டாக விழா நடந்தது.
இதில், 200க்கும் மேற்பட்ட கிடாக்கள், 50க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.